வேலைவாய்ப்பகத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.


திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 27) நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்த வேலை வழங்குவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாக வந்து தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்வதற்கான முகாமில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் தொழிற்கல்வித் தகுதி உடையோா் கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும்.
இந்த முகாம் மூலம் வேலை பெறுவோரது வேலைவாய்ப்பு பதிவு எதுவும் ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். இந்தப் பணி முற்றிலும் இலவசமானது என மாவட்ட வேலைவாய்ப்பகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...