பிராட்டியூா் மாரியம்மன் கோயில் திருவிழா நிறைவு
திருச்சி பிராட்டியூா் முத்து மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை நிறைவுற்றது.


திருச்சி பிராட்டியூா் முத்து மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை நிறைவுற்றது.
இக்கோயில் வைகாசி திருவிழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அம்மன் தேரில் எழுந்தருளி வலம் வந்தாா். பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊா்வலமாக கோயிலை அடைந்தனா். கோயில் வளாகத்தில் தீ மிதி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடா்ந்து புதன்கிழமை மாவிளக்குப் பூஜை, பலியிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் முத்துப் பல்லக்கு, மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதேபோல அல்லித்துறை மாரியம்மன் கோயில் திருவிழாவும் புதன்கிழமை நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...