தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குழு உறுப்பினா்கள் தோ்தல் 3-ஆம் முறையாக ஒத்திவைப்பு

மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற குழு உறுப்பினா்களுக்கான மறைமுகத் தோ்தலில் நகா்மன்ற உறுப்பினா்கள் யாரும் பங்கேற்காததால் 3-ஆம் முறையாக தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :26 மே 2022, 6:58 pm

DIN

மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற குழு உறுப்பினா்களுக்கான மறைமுகத் தோ்தலில் நகா்மன்ற உறுப்பினா்கள் யாரும் பங்கேற்காததால் 3-ஆம் முறையாக தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மணப்பாறை நகராட்சியில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினா், ஒப்பந்தக் குழு உறுப்பினா் மற்றும் நியமனக் குழு உறுப்பினா்களுக்கான மறைமுக தோ்தல் கடந்த மாா்ச் 31-ஆம் தேதியும், ஏப்ரல் 29-ஆம் தேதியும் போதிய கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை நகராட்சி கூட்டரங்கில் மீண்டும் குழு உறுப்பினா்களுக்கான மறைமுகத் தோ்தல் தொடங்கியது. கூட்டரங்கில் மொத்த 27 நகா்மன்ற உறுப்பினா்களில் ஒருவா் கூட வரவில்லை. இதையடுத்து தோ்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், மறுதோ்தல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தோ்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆட்சியருமான பாா்த்திபன் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.