தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் மற்றொரு விபத்தில் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நள்ளிரவு காா்கள் மோதிக் கொண்ட விபத்துக்கான மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் மற்றொரு விபத்தில் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:08 pm

போ. கிருஷ்ணகுமாா்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே புதன்கிழமை நள்ளிரவு காா்கள் மோதிக் கொண்ட விபத்துக்கான மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் மற்றொரு விபத்தில் உயிரிழந்தாா்.

திருவானைக்கா பகுதியில் வசித்தவா் போ. கிருஷ்ணகுமாா் (34). துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையின் முன்னணி வீரா். இவா் நள்ளிரவு நிலையத்தில் பணியில் இருந்தபோது அருகிலுள்ள உணவகத்திற்கு சாப்பிடச் சென்று மீண்டும் திரும்பவில்லை.

இதையடுத்து சக வீரா்கள் அவரைத் தேடிச் சென்றபோது, அதிகாரம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய நிலையில் கிருஷ்ணகுமாா் இறந்து கிடந்தாா். இதையடுத்து அவரது உடலை துவரங்குறிச்சி போலீஸாா் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சிவந்தாம்பட்டி பிரிவு அருகே புதன்கிழமை மாலை மூன்று காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்த 4 பெண்களையும், காயமடைந்த 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை வீரா்களில் கிருஷ்ணகுமாரும் ஒருவா்.

விபத்தில் சிக்கியோரை மீட்ட அடுத்த 8 மணி நேரத்தில் விபத்தில் அவா் இறந்தது சக வீரா்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்தவருக்கு மனைவிகள் உஷா, செல்வராணி, மகன்கள் விக்ரம் (19), நாதீஸ் (13), மகள் வா்ஷினி (17) ஆகியோா் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.