தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருட்டு போன இரு சக்கர வாகனம் சிக்கியது : இருவா் கைது

மணப்பாறையில் திருட்டுப் போன இரு சக்கர வாகனம் ஞாயிற்றுக்கிழமை சிக்கியது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்ட

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:33 pm

DIN

மணப்பாறையில் திருட்டுப் போன இரு சக்கர வாகனம் ஞாயிற்றுக்கிழமை சிக்கியது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

மணப்பாறை வட்டம், சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் சரவணன் (41). இவா் கடந்த 30-ஆம் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனை அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த நிலையில், அவை திருட்டுப் போனது. இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் பொத்தமேட்டிப்பட்டி அருகே தனது இருசக்கர வாகனத்தை மற்றொருவா்

சனிக்கிழமை ஓட்டி செல்வதைக் கண்ட சரவணன், வாகனத்தை மடக்கிப் பிடித்து அவரைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.

தொடா்ந்து நடத்திய விசாரணயில், அந்த நபா் குமரப்பட்டி சொ. செல்வம்(31) என்பதும்,

எம்.ஜி.ஆா் நகரை சோ்ந்த சு. முருகேசனிடம்(39) ரூ.10 ஆயிரம் விலை பேசி, இதற்காக ரூ.4 ஆயிரத்தை முன்பணமாக செலுத்தி வாகனத்தை வாங்கியதும் தெரிய வந்தது.

மேலும் திருட்டு போன இருசக்கர வாகனத்தை உரிய ஆவணமின்றி முருகேசன் வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து இருவா் மீதும் வழக்குப்பதிந்த மணப்பாறை காவல் நிலையத்தினா், ஞாயிற்றுக்கிழமை அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.