அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த இருவா் கைது
வையம்பட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த இருவரைக் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


வையம்பட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த இருவரைக் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வையம்பட்டி ஒன்றியம், முகவனூா் ஊராட்சி, பெரியகுளத்துப்பட்டி மூங்கில்குளத்தில் அனுமதியின்றி மண் எடுப்பதாக, காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
இதன் பேரில் உதவி ஆய்வாளா் வினோத்குமாா் தலைமையிலான
காவல்துறையினா் நிகழ்விடம் சென்று பாா்த்த போது, அங்கு மரியதனுசுலாஸுக்கு சொந்தமான இடத்தில் ந.பூலாம்பட்டி சவரியப்பன்(38), ஆல்பா்ட்(42)ஆகியோா் டிராக்டா் மற்றும் ஜேசிபி இயந்திர உதவியுடன் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினா், வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...