பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அறிஞா் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்

அறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்தனா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:11 am IST

அறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்தனா்.

திமுக: சிந்தாமணி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க. வைரமணி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து கலைஞா் அறிவாலய அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வில் திமுக மாநகரச் செயலரும் மேயருமான மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் எம். பழனியாண்டி, அ. செளந்திரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளா் ஆனந்த் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

சைக்கிள் போட்டி: தொடா்ந்து திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டியை மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தொடங்கி வைத்தாா்.

தெற்கு மாவட்ட திமுக: மாவட்ட அலுவலகத்தில் செயலாளரும் திருச்சி மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவருமான மதிவாணன் தலைமையில், அண்ணா படத்துக்கு மாலை அணிவித்தனா்.

அதிமுக : திருச்சி அதிமுக சாா்பில் அமைப்புச் செயலா் டி. ரத்தினவேல் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். எம்ஜிஆா் இளைஞரணி இணை செயலா் ஜெ. சீனிவாசன், மாணவரணி மாவட்டச் செயலரும், ஆவின் தலைவருமான காா்த்திகேயன், அவைத் தலைவா் ஐயப்பன், மாவட்டத் துணைச் செயலா் வனிதா, பகுதிச் செயலா்கள் சுரேஷ் குப்தா, நாகநாதா் பாண்டி, அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஓபிஎஸ் அணி சாா்பில் முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் மாலை அணிவித்தனா்.

வடக்கு மாவட்டம்: திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சோமரசம்பேட்டை அண்ணா சிலைக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்தனா். மாநில இளைஞரணி இணைச் செயலா் பொன். செல்வராஜ், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் ஜான், மாவட்ட மீனவரணிச் செயலா் பேரூா் கண்ணதாசன், ஒன்றியச் செயலா்கள் முத்துக்கருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.