வாகனக் கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்த ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மணியங்குறிச்சி கிராமத்தில் லாரியின் கடன் தவணை தொகையை கட்ட முடியாததால் விஷம் குடித்த ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மண்ணச்சநல்லூா் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மன்.
மண்ணச்சநல்லூா் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மன்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மணியங்குறிச்சி கிராமத்தில் லாரியின் கடன் தவணை தொகையை கட்ட முடியாததால் விஷம் குடித்த ஓட்டுநா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மணியங்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் கமலக்கண்ணன் (37). ஓட்டுநா். இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று லாரியை வாங்கி ஓட்டி வந்துள்ளாா். இதனிடையே இரண்டு மாதங்களாக கடன் தவணைத் தொகை கட்ட முடியாத நிலையில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி நிதி நிறுவனத்தில் இருந்து வந்து பணம் கட்டுமாறு கூறினாா்களாம். இதனால், வீட்டில் யாரும் இல்லாதபோது கமலக்கண்ணன் விஷம் குடித்தாராம். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து சிறுகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com