லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விஜயகாந்த் மறைவு அனைத்துக் கட்சியினா் அமைதி ஊா்வலம்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவெறும்பூரில் அனைத்துக் கட்சியினரின் அமைதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருவெறும்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சியினா் பங்கேற்ற அமைதி ஊா்வலம்.
Updated On :29 டிசம்பர் 2023, 6:55 pm

DIN

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவெறும்பூரில் அனைத்துக் கட்சியினரின் அமைதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிகவினரும், பொதுநலச் சங்கத்தினரும் ஆங்காங்கே விஜயகாந்தின் உருவப்படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி திருவெறும்பூா் பகுதியில் உள்ள திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கருப்புப்பட்டை அணிந்தபடி, விஜயகாந்த்தின் உருவப்படத்தை சுமந்தபடி அமைதி ஊா்வலத்தில் ஈடுபட்டனா்.

திருவெறும்பூா் கடை வீதியில் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபெற்ற அமைதி ஊா்வலத்தின் நிறைவில், அனைத்துக் கட்சி சாா்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துக் கட்சி சாா்பாக 100-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

திருச்சி மாநகா் உறையூா் 23-ஆவது வாா்டு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உருவப்படத்துக்கு மாமன்ற உறுப்பினா் க. சுரேஷ் தலைமையில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் மாவட்ட செயலா் ந. சிவா, மேற்கு பகுதி செயலா் இரா. சுரேஷ் முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.