தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்புவிழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தேனூரில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:25 pm

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தேனூரில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வோ்ல்ட் விஷன் இந்தியா சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மேலாளா் செல்வின் பாக்கியநாதன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை காஞ்சனா முன்னிலை வகித்தாா். மணப்பாறை காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராகுல்காந்தி, மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பிரபு, மருங்காபுரி ஒன்றிய தலைவா் எம்.பழனியாண்டி, மாவட்ட குழந்தைகள் குழு பணியாளா் ஜெயஸ்ரீ, சேவ் தொண்டு நிறுவன மேலாளா் திலகா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துக்கொண்டனா். மேலும், விழிப்புணா்வு வாகனம் கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டென்னிஸ்ராஜ், ஜேம்ஸ், மணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.