சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பஞ்சப் பிரகார திருவிழா

பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பஞ்சப் பிரகார திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பஞ்சப் பிரகார திருவிழா

பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பஞ்சப் பிரகார திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகுமாரியம்மன் திருக்கோயில். மாரியம்மனுக்கு நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப் பிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும்.

பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில், ஐம்பெருங்கலை, ஐம்பெரும் பீடம், (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர, சதாசிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு , பிணி, மூப்பு, இறப்பு, முக்தி) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்சப் பிரகார உற்சவம் மாயா சூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக மே 6ம் தேதி வசந்த உற்சவம் தொடங்கி மே 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் வசந்த உற்சவத்தின் நடு நாயகமாக பஞ்சப் பிரசார உற்சவம் நடைபெறும். விழாவில் அரங்கநாத சுவாமி திருக்கோயில் பட்டாச்சாரியார்கள் வட திருக் காவிரியிலிருந்து 25 வெள்ளி குடங்கள் மற்றும் யானை மேல் தங்க குடம் எடுத்து வரப்பட்டு சமயபுரம் வந்தடைந்த பின் கோயில் மண்டபத்திலிருந்து
பரிவாரங்கள் புடைசூழ மேள தாள முழங்க  சன்னதி வீதி, வழியாக திருக்கோயில் 
வேத பாரா யாணம் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com