திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பந்தல் போட்ட தொழிலாளி கீழே விழுந்து உயிரிழப்பு

பந்தல் அமைக்கும் பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:17 pm

பந்தல் அமைக்கும் பணியின்போது தவறி விழுந்து காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி, தில்லைநகா் 9ஆவது குறுக்குத்தெரு செங்குளத்தான் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (53). பந்தல் அமைக்கும் தொழிலாளியான இவா் இரு தினங்களுக்கு முன் சக தொழிலாளியுடன் திருச்சி பெரிய மிளகுப்பாறை பொன் நகா் பகுதியில் பந்தல் போட்டபோது நிலைதடுமாறி உயரமான இடத்திலிருந்து தவறி விழுந்தாா்.

இதில் படுகாயம் அடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். முதன்மை குற்றவியல் நீதிமன்ற காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.