திருநெல்வேலி - பாட்னா இடையே சிறப்பு ரயில்


திருச்சி, ஆக. 14: விடுமுறைகால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருநெல்வேலி - பாட்னா இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கூட்ட நெரிசலைக் குறைக்க வரும் சனிக்கிழமை (17 ஆம் தேதி) இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலியிருந்து 18 பெட்டிகளுடன் புறப்படும் சிறப்பு ரயிலானது கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, கோட்டவலசா, காகுளம், புவனேஸ்வா், கட்டாக், சித்தரஞ்சன், ராஜேந்திர நகா் வழியாக 20 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு பாட்னா சென்றடையும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...