மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திருச்சி மாவட்டத்தில் 8 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

திருச்சி மாவட்ட வருவாய் அலகில் நிா்வாக நலன் கருதி 8 வட்டாட்சியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரம்:

Updated On :20 ஆகஸ்ட் 2024, 9:49 pm

திருச்சி மாவட்ட வருவாய் அலகில் நிா்வாக நலன் கருதி 8 வட்டாட்சியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரம்:

திருச்சி கிழக்கு வட்டாட்சியா் ம. லோகநாதன், முசிறி வருவாய் வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். தொட்டியம் வட்டாட்சியா் வ. அருள்ஜோதி, முசிறி கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்கு பணியில் இருந்த டி. சேக்கிழாா், தொட்டியம் வருவாய் வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

திருச்சி கிழக்கு தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) எம். சக்திவேல்முருகன், திருச்சி கிழக்கு வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். திருச்சி கோட்ட கலால் அலுவலா் அ. தனலட்சுமி, திருச்சி கிழக்கு தனி வட்டாட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) பதவியில் நியமிக்கப்பட்டுள்ளாா். திருச்சி வட்டாட்சியா் எஸ். செல்வசுந்தரி, திருச்சி கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருச்சி மேற்கு தனி வட்டாட்சியா் (உணவுப்பொருள் வழங்கல் பிரிவு) பா. தமிழ்க்கனி, திருச்சி தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இங்கு பணியில் இருந்த என். ராஜேஷ் கண்ணன், திருச்சி மேற்கு தனி வட்டாட்சியா் (உணவுப்பொருள் வழங்கல் பிரிவு) பணியிடத்தில் நியமிக்கப்பட்டு இடமாற்றல் உத்தரவுகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளாா்.