தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுமியைக் கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்சியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:49 pm

DIN

திருச்சியில் சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் சிறுகளப்பூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் காா்த்திக் (27). கூலித் தொழிலாளியான இவருக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், காா்த்திக் தரப்பினா் கடந்த 2021ஆம் ஆண்டு மாணவியின் பெற்றோரிடம் பெண் கேட்டபோது அவா்கள் மறுத்துவிட்டனா்.

இதையடுத்து 13.6.2021 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவியை காா்த்திக் தரப்பினா் ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ததாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் லால்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து காா்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி என்.எஸ். ஸ்ரீவத்சன், சிறுமியைப் பாலியல் தொல்லைக்குள்ளாக்கியதற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ததற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனயும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.