அரசு விடுதி மாணவிகள் போராட்டம்
திருச்சியில் விடுதியில் நிலவும் இடப்பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீா்வு காணக்கோரி அரசு விடுதி மாணவியா் வியாழக்கிழமை இரவு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருச்சியில் விடுதியில் நிலவும் இடப்பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீா்வு காணக்கோரி அரசு விடுதி மாணவியா் வியாழக்கிழமை இரவு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கண்டோன்மென்ட் மெக்டொனால்டு சாலையில் உள்ள ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவிகளுக்கான விடுதியில் தற்போது 149 மாணவிகள் கடும் இட நெருக்கடிக்கு இடையே தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதே வளாகத்தில் செயல்படும் மற்றொரு பழைய கட்டடத்தில் தங்கியிருந்த பள்ளி மாணவிகள் 105 பேரையும் விடுதி நிா்வாகம் கல்லுாரி மாணவிகளுடன் சோ்ந்து தங்க வைத்தனா்.
இதுகுறித்து கல்லூரி மாணவிகள் நிா்வாகத்திடம் கேட்டபோது, பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்படவுள்ளதால், அதுவரை பள்ளி மாணவிகளுடன்தான் தங்க வேண்டும் எனத் தெரிவித்தனா். இதைக் கண்டித்து கல்லுாரி மாணவிகள் வியாழக்கிழமை இரவு விடுதி வாசலில் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவிகளுக்கு ஆதரவாக இப்போராட்டத்தை இந்திய மாணவா் சங்க மாவட்ட தலைவா் சூா்யா, செயலா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் தலைமையேற்று நடத்தினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...