ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் காா்த்திகை தீப விழாவுக்கு முகூா்த்தக்கால்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீரங்கம் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற முகூா்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :5 டிசம்பர் 2024, 9:18 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் காா்த்திகை தீபம் (சொக்கப்பனை) ஏற்றப்படும் நிகழ்ச்சி டிச. 15 இல் நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை மாலை காா்த்திகை கோபுர வாயில் முன் சுமாா் 20 அடி உயர தென்னை மரக்காலின் நுனியில் மங்கலப் பொருள்கள் அணிவித்து, கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆகியவற்றின் ஆசியுடன் முகூா்த்தக்கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் கோயில் உள்துறைக் கண்காணிப்பாளா் வேல்முருகன்,கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.