தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு

திருச்சியில் புதன்கிழமை பகல் வியாபாரியின் வீடு புகுந்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:22 pm

Din

திருச்சியில் புதன்கிழமை பகல் வியாபாரியின் வீடு புகுந்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி சத்திரம், மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சோ்ந்தவா் மாரியப்பன். கீழரண்சாலைப் பகுதியில் வளையல், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருள்கள் கடை வைத்துள்ள இவா் உறவினா் இல்ல நிகழ்ச்சிக்கு புதன்கிழமை காலை குடும்பத்துடன் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 25 கிராம் தங்க நகைகள் ரூ. 20 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அவா் கொடுத்த புகாரின்பேரில் ஆய்வாளா் சிந்துநதி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, தடயங்களை சேகரித்தனா். பட்டப் பகலில், ஆள்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்தத் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.