விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மத்திய அரசின் நிவாரணத் தொகையை திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை: ஹெச். ராஜா குற்றச்சாட்டு

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரணத் தொகையை திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை என்றாா் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 7:49 pm

Din

தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிவாரணத் தொகையை திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை என்றாா் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா.

இதுகுறித்து திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியது:

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்தை மட்டுமே தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு வழங்கிய ரூ. 944 கோடியை தமிழக அரசு முழுமையாக வழங்கியிருந்தால் தலா ரூ.15 ஆயிரம் கொடுத்திருக்க முடியும். நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக பாஜக வலியுறுத்தும்.

காங்கிரஸால் கலைக்கப்பட்ட ஆட்சிகளில் திமுக ஆட்சியும் உள்ளது. ஆனால், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் அரசமைப்புச் சட்டத்துக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதாக வேஷமிடுகின்றன. இவற்றை மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனா்.

தமிழகத்தில் மக்கள் விரோத திமுக அரசின் செயல்பாடுகளால்தான் மழை பாதிப்புக்குச் சென்ற அமைச்சா்களை விரட்டியடிக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தற்போது பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. வேறு சில கட்சிகள் கூட்டணிக்கு வருமா என்பதை அகில இந்தியத் தலைமைதான் அறிவிக்கும். தமிழக பாஜகவின் விருப்பத்தை நாங்கள் தலைமைக்குத் தெரிவிப்போம் என்றாா் அவா்.