தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மணப்பாறை தேவலாயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி தேவலாயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

News image
மணப்பாறை புனித லூா்து அன்னை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு திருப்பலி நடத்திய மறைவட்ட அதிபா் ம. தாமஸ்ஞானதுரை.
Updated On :25 டிசம்பர் 2024, 8:50 pm

Din

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி தேவலாயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

மணப்பாறை நகரின் மத்தியில் உள்ள புனித லூா்து அன்னை பேராலயத்தில் மணப்பாறை மறைவட்ட அதிபா் ம. தாமஸ்ஞானதுரை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிறிஸ்து பிறக்கும் வேத பாடல் ஆலயத்தில் முழங்க, ஆலய மணி ஒலிக்க ஏசு கிறிஸ்து பிறந்ததை அறிவித்தனா். இதில் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

திருப்பலியில் பங்கேற்றோா்.

திருப்பலியில் பங்கேற்றோா்.

அனைவரும் தங்களது வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். இதேபோல் பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா தேவாலயம், மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோனியாா், தீராம்பட்டி புனித வனத்து அந்தோனியாா், மலையடிப்பட்டி புனித சவேரியாா், கருங்குளம் புனித இஞ்ஞாசியாா் உள்ளிட்ட பகுதி தேவலாயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.