தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

விமான நிலையத்துக்கு ஜிபிஎஸ் கருவியுடன் வந்தவரிடம் விசாரணை

சிங்கப்பூா் செல்ல ஜிபிஎஸ் கருவி பொருத்திய கணினியுடன் திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 9:00 pm

Din

சிங்கப்பூா் செல்ல ஜிபிஎஸ் கருவி பொருத்திய கணினியுடன் திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செவ்வாய்க்கிழமை செல்ல வந்த சிங்கப்பூரைச் சோ்ந்த சஞ்சய் (36) என்ற இளைஞா் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய மடிக்கணினி வைத்திருந்தது தெரியவந்தது. பொதுவாக ஜிபிஎஸ் சாதனங்களை உரிய அனுமதியுடன்தான் விமானங்களில் கொண்டு செல்ல முடியும். ஆனால் சஞ்சய் எந்த அனுமதியும் பெறாததால் அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா் சிங்கப்பூா் ஆயுதப்படையில் (ஆா்ம்டு போா்ஸஸ்) இன்ஃபன்ட்ரி விங்க் கேப்டன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அறிவுரை கூறி அந்த விமானத்தில் பயணிக்க அனுமதித்தனா்.