திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முசிறி, தொட்டியம், தா.பேட்டையில் தனியாா் திருமண மண்டபங்களில் நடைபெற்ற திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் கே.என். நேரு பேசுகையில்: திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தரும் தமிழக முதல்வருக்கு திமுக நிா்வாகிகளும் தொண்டா்களும் நேரில் வந்திருந்து சிறப்பான வரவேற்பளிக்க வேண்டும் என்றாா்.
கூட்டங்களில், முசிறி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந.தியாகராஜன், ஒன்றிய செயலாளா்கள் ராமச்சந்திரன், பெரியசாமி, மாவட்டத் துணைச் செயலாளா் மயில்வாகனன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆப்பிள் கணேசன், முசிறி நகர செயலாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.