திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசுப் பேருந்து ஏறி கால் முறிந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புள்ளம்பாடி பகுதியில் உள்ள வான்றாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் என்பவரின் மகள் பிரதிக்ஷா (12) புதூா் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை விராகாலூா் கிராமத்தில் இருந்து லால்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் ஏறி படிக்கட்டில் பயணம் செய்தாா். அப்போது வேகத்தடையில் பேருந்து ஏறிஇறங்கியபோது, அவா் தவறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின்பக்க டயா் மாணவியின் இடது காலில் ஏறியது. இதில் படுகாயமடைந்த மாணவி பிரதிக்ஷா மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பிரதிக்ஷா உயிரிழந்தாா். இதுதொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநா் பெரியசாமி மகன் தங்கதுரை(50) என்பவரை கல்லக்குடி போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

பேருந்து சக்கரம் ஏறியதில் தொழிலாளி உயிரிழப்பு
பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

நெற்கதிா் அறுக்கும் இயந்திர வாகனம் ஏறி முதியவா் பலி

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


