மலேசிய பயணி திருச்சி விமான நிலையத்தில் மயங்கி விழுந்து சாவு
மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.


மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் துறையூா் பகுதியைச் சோ்ந்தவா் வி. முனீஸ்வரன் (58). மலேசிய குடியுரிமை பெற்றுள்ள இவா் குடும்பத்தினருடன் அங்கு வசித்து வந்த நிலையில் சுயதொழில் செய்து வருகிறாா். ஆண்டுக்கு ஒரு முறை மகளின் சிகிச்சைக்காக தாயகம் வந்து திருச்சியில் சிகிச்சை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் சிகிச்சைக்காக தனது மனைவி மற்றும் மகளுடன் ஏா் ஏசியா விமானத்தில் செவ்வாய்க்கிழமை திருச்சி வந்தாா்.
விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு மற்றும் சுங்கத்துறை சோதனைகளுக்காக காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளாா். விமான நிலைய பாதுகாப்பு படையினரின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையடுத்து அவருடைய உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...