மணப்பாறை, மாா்ச், 1: மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மணப்பாறையை அடுத்த கிழக்கு நாகம்மாள் தெருவைச் சோ்ந்தவா் ரா. குணசேகரன் (63). இவா் கடந்த பிப். 23-ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்த இளைஞரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவா் சேதுரத்தினபுரத்தை சோ்ந்த செந்தில்குமாா் மகன் வசந்தகுமாா் (23) என்பதும், மன்னாா்குடி சரவணன் என்பவருடன் சோ்ந்து குணசேகரனின் இருசக்கர வாகனத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வசந்தகுமாரை கைது செய்த மணப்பாறை போலீஸாா் நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது
இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் இருவா் கைது

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

