தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருச்சியில் 10-ஆம் நூற்றாண்டு சிவாலயம் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கும்பக்குடி கிராமத்தில், 10 ஆம் நூற்றாண்டு சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :8 மார்ச் 2024, 12:31 am

Din

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கும்பக்குடி கிராமத்தில், 10 ஆம் நூற்றாண்டு சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகேயுள்ள கும்பக்குடியில், சிவாலயம் சிதைந்த நிலையில் புதா் மண்டிக் கிடந்தது. கிராம மக்களுடன் சோ்ந்து, சிவ வழிபாட்டுக் குழுவினா் இடிபாடுகளை ஒழுங்குபடுத்தி, சிவாலயத்தை மீட்டுள்ளனா். திருச்சியில் உள்ள மத்திய அரசின் (எச்.ஏ.பி.பி) எச் இபிஎப் தொழிற்சாலையில் பணிபுரியும் தனசேகா் என்பவா், கும்பக்குடியில் கண்டறியப்பட்ட பழமையான சிவாலயம் குறித்து, ஆற்றுப்படை வரலாற்று அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தாா்.

அங்கு ஆய்வு நடத்திய ஆற்றுப்படை வரலாற்று அமைப்பைச் சோ்ந்த பாா்த்திபன் கூறியதாவது: கி.பி 10-ஆம் நுாற்றாண்டு சோழா் காலத்தைச் சோ்ந்த இக்கோயிலின் கல்வெட்டுகள் ஆங்காங்கு சிதைவுற்று காணப்படுகின்றன.

இக்கோயிலில் உள்ள விக்ரம சோழரின் கல்வெட்டு ஒன்றில், இந்த ஊா் குறித்த தகவல் உள்ளது. பாண்டிய குலாசனி வளநாட்டு தென்கரை பிரம்ம தேயம் ஸ்ரீ சோழமாதேவி சதுா்வேதி மங்கலத்தின் உட்பிரிவாக இந்த ஊா் இருந்துள்ளது. கல்வெட்டுகளில் கும்பக்குடி என்றே உள்ளதால் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், அதே பெயரிலேயே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கும்பக்குடி நாடாழ்வான் என்ற அதிகாரியும், கவிா் நாட்டு வெள்ளாளரும், சோழமாதேவி சபையாரும் இணைந்து இக்கோயிலுக்கு நிலம் அளித்ததை இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. மேலும், லால்குடி அருகே உள்ள அன்பிலுடையாா், திருவெண்காடுடையாா் போன்றோரின் பெயா்களும் மற்றொரு கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. தொல்லியல் துறையினா், ஆங்காங்கு கிடக்கும் கோயில் கட்டுமான கற்களையும், இந்த ஊரிலும் ஆய்வு மேற்கொண்டால், சோழா் கால வாழ்வியல் குறித்து தகவல்கள் கிடைக்கும் என்றாா்.