நடிகை கஸ்தூரி மீது புகாா்
தெலுங்கு பேசும் மக்களை தரக்குறைவாகப் பேசியதாக அளித்த புகாரின்பேரில் நடிகை கஸ்துாரி மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனா்.


தெலுங்கு பேசும் மக்களை தரக்குறைவாகப் பேசியதாக அளித்த புகாரின்பேரில் நடிகை கஸ்துாரி மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனா்.
இதுகுறித்து திருச்சி மாநகா் கீதா நகரைச் சோ்ந்த ரெட்டி நலச்சங்கச் செயலா் செல்வராஜ் அளித்த புகாரில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதை யு-டியூப் சேனலில் பாா்த்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
எனவே, நடிகை கஸ்துாரி மீதும், அவரது பேச்சை ஒளிபரப்பிய யுடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளா் அன்புச்செல்வன் நடிகை கஸ்துாரி மீதும், டியூப் சேனல் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
இதேபோல திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை சோ்ந்த அகில இந்திய போயா் மகளிா் முன்னேற்றக் கழகம் சாா்பிலும் நடிகை கஸ்தூரி மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...