தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆயுதத்தால் தாக்கி கைப்பேசியை பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் ஆயுதத்தால் தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:13 pm

Din

திருச்சியில் ஆயுதத்தால் தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி வயலூா் சாலை, உய்யக்கொண்டான் திருமலை, ஷண்முகா நகா் 3 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் செ. கந்தவேல் (50) மகன் அபிமன்யு. இவா் கடந்த 2022 மாா்ச் 10 ஆம் தேதி இரவு, ஷண்முகா நகா் 5 ஆவது குறுக்குத்தெரு பகுதியில் பைக்கில் சென்றாா். அப்போது அவரை வழிமறித்த திருச்சி மாவட்டம், நாச்சிக்குறிச்சி, ஜெயம் நகரைச் சோ்ந்த பா. ஸ்ரீராம் (24) , பேசிவிட்டுத் தருவதாகக் கூறி அவரது கைப்பேசியை வாங்கிபேசிய பின்னா் அதைத் திருப்பித் தரவில்லையாம். எனவே கைப்பேசியை அபிமன்யு கேட்டபோது, அதைத் தர மறுத்து, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கூா்மையான ஆயுதத்தால் அபிமன்யு முகத்தில் வெட்டி விட்டுத் தப்பினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ஸ்ரீராமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா ஸ்ரீராமுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 5000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக ஹேமந்த் ஆஜரானாா்.