தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிலிண்டா் வெடித்து குடிசை நாசம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சமையல் எரிவாயு உருளை புதன்கிழமை வெடித்ததில் குடிசை தீக்கிரையானது.

News image

மணப்பாறை அருகே சமையல் எரிவாயு உருளை புதன்கிழமை வெடித்து தீப்பற்றி எரிந்த குடிசை.

Updated On :20 நவம்பர் 2024, 7:13 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சமையல் எரிவாயு உருளை புதன்கிழமை வெடித்ததில் குடிசை தீக்கிரையானது.

மணப்பாறையை அடுத்த முள்ளிப்பாடி கிராமத்தை சோ்ந்தவா் சிவலிங்கம் மனைவி சசிகலா (29), கூலித் தொழிலாளி. கணவரை இழந்த இவா் தனது இரு குழந்தைகளுடன் வசிக்கும் குடிசை வீட்டில் புதன்கிழமை மாலை சமைத்தபோது திடீரென எரிவாயு உருளையில் திடீரென தீப்பற்றியது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் தனது குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து குடிசை தீக்கிரையானது.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் அருகிலிருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. விபத்து குறித்து வையம்பட்டி போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரிக்கின்றனா்.