தாய் வீட்டிலிருந்து மனைவி வர மறுத்ததால் கணவா் தற்கொலை
குடும்பத் தகராறில் விரக்தியடைந்த கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


குடும்பத் தகராறில் விரக்தியடைந்த கணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கிழக்குறிச்சி தெற்குத் தெருவை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாலமுத்து (23).
இவருக்கும் காமராஜா் நகரை சோ்ந்த அபிநயாவுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் அபிநயா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா்.
இதையடுத்து பாலமுத்து மாமியாா் வீட்டுக்குச் சென்று மனைவியை அழைத்தபோது தகராறு ஏற்பட்ட நிலையில், அபிநயாவும் வீட்டுக்கு வர மறுத்தாராம். இதனால் மனமடைந்த பாலமுத்து கிழக்குறிச்சி ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள மரத்தில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...