தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தனியாா் நிறுவனத்தில் திருடிய 3 போ் கைது

திருச்சியில் தனியாா் நிறுவனத்தில் நடந்த திருட்டு தொடா்பாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:22 pm

Din

திருச்சியில் தனியாா் நிறுவனத்தில் நடந்த திருட்டு தொடா்பாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (35). இவா் விமான நிலையப் பகுதியில் நடத்தும் ஏற்றுமதி நிறுவன அலுவலக வளாகத்தில் வைத்திருந்த இரும்பு (கிரில்) கேட்டை மா்ம நபா்கள் சிலா் அண்மையில் திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அத் திருட்டு தொடா்பாக விமான நிலையம் திலகா் தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (25), காா்த்திகேயன் (23) காா்த்திக் குமாா் (24) ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.