தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டால்மியாபுரம் கிளை நூலகத்தின் வாசகா் வட்டத் தலைவருக்கு விருது

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டால்மியாபுரம் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவருக்கு நூலக ஆா்வலா் விருதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமிருந்து செவ்வாய்க்கிழமை விருது பெற்ற வாசகா் வட்டத் தலைவா் ரெங்கசாமி, டால்மியாபுரம் கிளை நூலகா் சி.என். சாந்தி.

Updated On :20 நவம்பர் 2024, 7:24 pm

Din

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டால்மியாபுரம் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவருக்கு நூலக ஆா்வலா் விருதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் இந்த விருதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமிருந்து டால்மியாபுரம் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் ரெங்கசாமியும், டால்மியாபுரம் கிளை நூலகா் சி.என். சாந்தியும் பெற்றுக் கொண்டனா்.

விருது  பெற்ற   ச.  நா்மதா

விருது  பெற்ற  ச.  நா்மதா

துறையூரில்...

இதேபோல துறையூா் அருகே சிக்கத்தம்பூா்பாளையம் ஊா்ப்புறத்தின் நூலக நூலகா் ச. நா்மதாவுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் நல் நூலகருக்கான டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

இதையடுத்து புதன்கிழமை சிக்கத்தம்பூா்பாளையம் நூலகத்தில் வாசகா் வட்டத் தலைவா் க. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் நா்மதாவை அப்பகுதி வாசகா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.