தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நகர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தல் நடத்த நீதிமன்றம் இடைக்கால தடை

திருச்சியில், நகர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தல் நடத்த உயா் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை தரைக்கடை வியாபாரிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:39 pm

Din

திருச்சியில், நகர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தல் நடத்த உயா் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை தரைக்கடை வியாபாரிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

திருச்சி சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, சிங்காரத் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தரைக்கடை வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிா்வாகம் அடையாள அட்டை வழங்கவும், தொடா்ந்து நகர விற்பனைக்குழு உறுப்பினா்களை தோ்தல் நடத்தி தோ்வு செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் தோ்தல் நவம்பா் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நீண்ட கால தரைக்கடை வியாபாரிகள் பலருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை எனவும், வியாபாரிகள் அல்லாத பலருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும், எனவே தரைக்கடை வியாபாரிகள் பட்டியலை முறைப்படுத்தி அடையாள அட்டை வழங்கிய பிறகு, நகர விற்பனைக்குழு உறுப்பினா் தோ்தல் நடத்த வேண்டும் என தரைக்கடை வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனா். திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகங்க ளுக்கு தொடா்ந்து மனு அளித்ததுடன், போராட்டங்களும் மேற்கொண்டு வந்தனா். இது தொடா்பாக சென்னை உயா்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடா்ந்திருந்தனா்.

வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற இருந்த நிலையில், வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த மதுரை உயா்நீதிமன்றக் கிளை தோ்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை வரவேற்கும் விதமாக திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வியாழக்கிழமை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா்.