தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடவுச்சீட்டில் முறைகேடு: பெண் உள்ளிட்ட 4 போ் கைது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடவுச்சீட்டில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்த பெண் உள்பட 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:33 pm

Din

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கடவுச்சீட்டில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்த பெண் உள்பட 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் சோ்ந்தவா் ஷேக் மொய்தீன் (50),

தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சோ்ந்த வெள்ளையம்மாள் (43) ஆகிய இருவரும் வெளிநாடு செல்லும்வகையில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தனா். அவா்களது ஆவணங்களைப் பரிசோதனை செய்ததில் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த திருநாவுக்கரசு (53), ராமநாதபுரம் மாவட்டம் சித்தா்கோட்டையைச் சோ்ந்த அகமது மொய்தீன் (50) ஆகியே இருவரும் வெளிநாடு செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தனா். அப்போது, அவா்களின் கடவுச்சீட்டில் முறைகேடாகப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

புகாா்களின் பேரில் திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷேக் மொய்தீன், வெள்ளையம்மாள், திருநாவுக்கரசு, அகமதுமொய்தீன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.