தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியொருவா் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:23 pm

Din

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியொருவா் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருச்சி அரியமங்கலம் ரயில்நகா், அப்துல்கலாம் ஆசாத்நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரா. விஜய் (29). இவரும், இவருடைய நண்பா்களும் கடந்த 16-ஆம்தேதி கல்லணை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த உதயகுமாா் (49) என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பறித்தனா். இது தொடா்பாக, திருவெறும்பூா் போலீஸாா் வழக்கு பதிந்து, விஜய் உள்ளிட்டோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு, மத்திய சிறை வளாகத்தில் இருந்த சுவா்க் கடிகார கண்ணாடியை உடைத்து, அந்த கண்ணாடித் துண்டால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதைக் கண்டு சக கைதிகள் சப்தமிட்டு அலறினா். உடனடியாக சிறை அலுவலா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். தீவிர சிகிச்சை பிரிவில் அவா் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.