தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

ஓசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:24 pm

Din

ஓசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டனா்.

ஓசூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை காலை குமாஸ்தா ஒருவா் வழக்குரைஞரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்ஒரு பகுதியாக திருச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் மத்திய, மாநில அரசுகள் வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்தினா். திருச்சியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு காரணமாக நீதிமன்றப் பணிகள் பாதிப்புக்கு உள்ளாயின.