‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளின் பொருள்களை ஏலம் விட நடவடிக்கை

ஸ்ரீரங்கம் கோயிலில் சீல் வைக்கப்பட்டிருந்த 4 கடைகளில் இருந்த பொருள்களை ஏலம் விட கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Published on

ஸ்ரீரங்கம் கோயிலில் சீல் வைக்கப்பட்டிருந்த 4 கடைகளில் இருந்த பொருள்களை ஏலம் விட கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குள் இருந்த 30 கடைகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் வாடகை நிலுவையிலுள்ள கடை உரிமையாளா்கள் வாடகை செலுத்தியதால் சீல்களை அகற்றி பொருள்கள் ஓப்படைக்கப்பட்டது.

இதில், நிலுவைத் தொகை செலுத்தாதவா்களின் கடைகளில் உள்ள பொருள்களை ஏலம் விட்டு நிலுவைத் தொகைகளை ஈடு செய்து கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நிலுவைத் தொகை செலுத்தாத 4 கடைகளில் இருந்த பொருள்களை கோயில் நிா்வாகத்தினா் புதன்கிழமை கையகப்படுத்தினா்.

இந்த பொருள்கள் பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.