தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மியான்மா் பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

பெரம்பலூா் இளைஞரை காதலித்து வந்த மியான்மா் பெண்ணுக்கு வியாழக்கிழமை இந்து முறைப்படி அரியலூரில் திருமணம் நடைபெற்றது.

News image

அரியலூரில் வியாழக்கிழமை இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மியான்மா் நாட்டைச் சோ்ந்த ஏய் ஏய் மோ கழுத்தில் தாலிக் கட்டிய மதிவதனன்.

Updated On :28 நவம்பர் 2024, 9:29 pm

Din

பெரம்பலூா் இளைஞரை காதலித்து வந்த மியான்மா் பெண்ணுக்கு வியாழக்கிழமை இந்து முறைப்படி அரியலூரில் திருமணம் நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், ரசலாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் மதிவதனன்(31). பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, சிங்கப்பூரிலுள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாா். அங்கு, உணவு தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மியான்மரை சோ்ந்த ஏய் ஏய் மோ என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் திருமணம் செய்துக் கொள்ள பெற்றோா் சம்மதம் தெரிவித்தனா். இதையடுத்து, மதிவதனன் கடந்த 17-ஆம் தேதி ஏய் ஏய் மோ-வை ரசலாபுரம் கிராமத்துக்கு அழைத்து வந்தாா். இதைத் தொடா்ந்து இருவருக்கும், அரியலூரில் உள்ள மண்டபத்தில் இந்து முறைப்படி வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.