தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேரூராட்சி கூட்டத்தை உறுப்பினா்கள் புறக்கணிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி கூட்டத்தை வியாழக்கிழமை உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 10:00 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி கூட்டத்தை வியாழக்கிழமை உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

பொன்னம்பட்டி பேரூராட்சி சாதாரண கூட்டத்துக்கு செயல் அலுவலா் அழகேந்திரன் அழைப்பு விடுத்திருந்தாா். அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேரூராட்சி தலைவா் சரண்யா நாகராஜன் மற்றும் துணைத் தலைவா் உள்ளிட்ட 15 உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.

பிறகு, திமுகவைச் சோ்ந்த துணைத் தலைவா் ரதி ரமேஷ், விசிக, தேமுதிக, அதிமுக, சுயேச்சை உள்பட 9 வாா்டு உறுப்பினா்கள் தங்களது வாா்டுகளிலும் எவ்வித மக்கள் நல பணிகளும் நடைபெறவில்லை எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்த 9 வாா்டு உறுப்பினா்களும் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணிப்பது இது 3-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.