ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:07 pm

Din

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் குமரேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பா. பிரவீன் (23). இவா், தனது உறவினா் குடும்பத்தைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் திருவெறும்பூா் மகளிா் காவல் நிலையத்தில் 2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் உரிய விசாரணை நடத்தி வழக்குப் பதிந்து பிரவீனைக் கைது செய்தனா். மேலும் திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் இது தொடா்பான வழக்கு நடைபெற்று வந்தது. குற்றம் நிரூபணமானதையடுத்து, பிரவீனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் எம்.கே. ஜாகிா் உசேன் ஆஜரானாா்.