துறையூா் வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 நாள் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டம் துறையூா் வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன.


திருச்சி மாவட்டம் துறையூா் வட்டாரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன.
துறையூரில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் மூன்று சக்கர வண்டிகள், மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள் மற்றும் நடை பழகு உபகரணம், காதுக்கு பின் அணியும் காதொலி கருவி, பிரெய்லி கை கடிகாரம், செயற்கை அவயங்கள் (செயற்கை கை, கால்) ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இவைகளைப் பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகள் மதிப்பீடு செய்யும் சிறப்பு முகாம் துறையூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதேபோல, நாகலாபுரம் ஆதிதிராவிடா் நல
உயா்நிலைப்பள்ளியில் அக். 21-ஆம் தேதியும், சிக்கத்தம்பூா் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளியில் அக்.22-ஆம் தேதியும் அளவீட்டு முகாம் நடைபெறவுள்ளது. 40 சதவிகித பாதிப்புக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...