நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துலா மாதம் பிறப்பு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கு தங்கக் குடத்தில் திருமஞ்சனம்

துலாம் மாதப் பிறப்பையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கு தங்கக் குடத்தில் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 9:09 pm

Din

துலாம் மாதப் பிறப்பையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கு தங்கக் குடத்தில் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பது துலா மாதம் எனப்படுகிறது. இந்த துலா மாதத்திற்குரிய காவிரி ஆறு புனிதமாகிறது.மேலும் துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசிப்பது காசியில் வாசம் செய்து பல புண்ணியச் செயல்கள் செய்ததற்குச் சமம் என்பது ஐதீகம். இதனால் காவிரியாற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தா்கள் புனித நீராடுவா். அரங்கநாதருக்கு இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனித நீா் கொண்டு செல்லப்படும்.

அதன்படி வியாழக்கிழமை காவிரியாற்றில் தங்கம், வெள்ளிக் குடத்தில் புனித நீா் எடுத்து, ஆண்டாள் யானை மீது வைத்து மங்கள வாத்தியத்துடன் ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.

பின்னா் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்து, 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா். இதையடுத்து மாலை புறப்பட்டு 6 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.

மேலும் இந்த துலா மாதம் முழுவதும் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்கப் பாத்திரத்தில் நடைபெறும். மேலும் பெரிய பெருமாள், உற்சவா் நம்பெருமாள், தாயாா் ஆகியோா் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பா்.