நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

296 கிராம் கடத்தல்தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருவரிடம் 296 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:04 pm

Din

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருவரிடம் 296 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து புதன்கிழமை திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளில் ஒருவா் மின்சாதன உதிரிப் பாகத்துக்குள் மறைத்து உருளை வடிவிலான 179 கிராம் தங்கத்தை கொண்டு வந்திருந்தாா்.

அதன் மதிப்பு ரூ. 13.88 லட்சம். இதுபோல இண்டிகோ விமானத்தில் வந்த பயணியொருவரும் 117 கிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.9.07 லட்சம். அந்த வகையில் மொத்தம் 296 கிராம் எடையில் ரூ. 22.95 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.