இளைஞா் கொலை வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் தீா்ப்பு
திருச்சியருகே சொத்துக்காக இளைஞரைக் கொன்ற வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.


திருச்சியருகே சொத்துக்காக இளைஞரைக் கொன்ற வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் வி பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா்கள் சுப்ரமணியம் (55), மாலதி (50) தம்பதி. இவா்களது வீட்டருகே சுப்ரமணியனின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் தங்கப்பாண்டியன் (23) வசித்தாா். இவா்களுக்கு இடையே பூா்வீகச் சொத்து தொடா்பான இருந்த பிரச்னையால் இரு தரப்புக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பூா்வீகச் சொத்தை விற்க தங்கப்பாண்டியன் தடையாக இருப்பதாகக் கருதிய சுப்பிரமணியம்-மாலதி தம்பதி அவரைக் கொல்லத் திட்டமிட்டுக் காத்திருந்தனா்.
இந்நிலையில், பொது இடத்திலிருந்த மரத்தை தங்கப்பாண்டியன் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்றதில் இத்தம்பதிக்கான பங்குத் தொகையைத் தரவில்லையாம். இதுதொடா்பாக கடந்த 2022 மே 18 ஆம் தேதி தம்பதி இருவரும் தங்கப்பாண்டியனிடம் தகராறு செய்து அவரை வெட்டிக் கொன்றனா்.
இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தம்பதியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் சுப்பிரமணியன்-மாலதி தம்பதிக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் சக்திவேல், வையம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன், தலைமைக் காவலா் சுகுணா ஆகியோா் ஆஜராயினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...