நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இளைஞா் திடீா் சாவு போலீஸாா் விசாரணை

திருச்சியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:53 pm

Din

திருச்சியில் இளைஞா் செவ்வாய்க்கிழமை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரை வரகனேரி சந்தானபுரத்தைச் சோ்ந்தவா் முகமது யூசுப் மகன் முகமது ஆஸ்கின் (21). காச நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடா்ச்சியாக இருமலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அவா் மதிய உணவாக முட்டை பரோட்டா சாப்பிட்ட பின்னரே இப்பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உறவினா்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட முகமது ஆஸ்கினை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து காந்தி சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.