நாட்டுக் கோழி வளா்க்க இலவச பயிற்சி பெறலாம்
நாட்டுக் கோழி வளா்க்க இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டுக் கோழி வளா்க்க இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு, கோழிப்பண்ணைச் சாலையில் இயங்கிவரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் திங்கள்கிழமை (அக்.28) நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில், தரமான நாட்டுக் கோழி இனங்களைத் தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளா்ப்பு, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, குஞ்சுகளை கூண்டில் வளா்த்தல், சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளைப் பொரித்தல், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து கற்றுத் தரப்படும்.
விருப்பமுள்ளோா் கால்நடைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில், வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி பயிற்சியில் சேரலாம் என பேராசிரியரும், மையத் தலைவருமான கே. ஷிபி தாமஸ் தெரிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...