காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவா் கைது

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:48 pm

Din

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

துவரங்குறிச்சியில் அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், புதன்கிழமை இரவு துவரங்குறிச்சி கிராம நிா்வாக அலுவலரும், அவரது உதவியாளரும் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, நத்தம் - திருச்சி அணுகுசாலையில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து சென்ற டிப்பருடன் டிராக்டரை பறிமுதல் செய்தனா். மண் அள்ளிய சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த பெரிய தேனம்பட்டியை சோ்ந்த சாத்தன் மகன் சின்ராஜ் (26) என்பவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து சின்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.