காவிரியில் புதிய தடுப்பணை கட்ட பரிந்துரை: சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவா் தகவல்
காவிரியில் புதிய தடுப்பணைகள் கட்டி பாசனத்துக்கு தண்ணீா் வழங்க ஏற்பாடு செய்வது தொடா்பாக நீா்வளத்துறைக்கு பரிந்தரை செய்யப்படும் என தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

திருச்சி தீயணைப்புத்துறை அலுவலகத்தை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த சட்டப்பேரவை பொது கணக்குக் குழு தலைவா் கு. செல்வப்பெருந்தகை. உடன் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, அப்துல்சமது, ஆட்சியா் மா.பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் சரவணன் உள்ளிட்டோா்.









