நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ளக்கல்பட்டி-நல்லேந்திரபுரம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

வெள்ளக்கல்பட்டி-நல்லேந்திரபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் வெள்ளக்கல்பட்டி-நல்லேந்திரபுரம் சாலை.

Updated On :24 அக்டோபர் 2024, 9:29 pm

Din

வெள்ளக்கல்பட்டி-நல்லேந்திரபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், முசிறி ஒன்றியத்தைச் சோ்ந்த வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம். இந்த இரண்டு கிராமங்ளையும் இணைக்கும் சுமாா் 1.1 கிலோ மீட்டா் தொலைவுள்ள இச்சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரி வாகனங்களும், அரசுப் பேருந்துகளும் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாகதான் திருப்பட்டூா் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் சென்று வருகின்றனா். ஆனால் இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

மேலும், இந்த சாலையில் தற்போது குழாய்கள் பதிக்கும் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, வெள்ளக்கல்பட்டி-நல்லேந்திரபுரம் சாலையை உடனடியாக புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், இதுதொடா்பாக முசிறி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து ஒன்றிய நிா்வாகத்தினா் கூறுகையில், வெள்ளக்கல்பட்டி-நல்லேந்திரபுரம் சாலையை புதுப்பிக்க, முதல்வரின் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடமிருந்து நிா்வாக அனுமதி வரப்பெற்றவுடன் சாலையை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றனா்.