திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம். ~பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பொட்டலங்கள்.
திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்கம். ~பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பொட்டலங்கள்.

திருச்சியில் ரூ. 73.45 லட்சம் மதிப்பு தங்கம், சிகரெட் வகைகள் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 73.45 லட்சம் மதிப்பிலான தங்கம், மற்றும் சிகரெட் வகைகளை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 73.45 லட்சம் மதிப்பிலான தங்கம், மற்றும் சிகரெட் வகைகளை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதன்கிழமை நள்ளிரவு ஏா் ஏசியா விமானத்தில் வந்த 3 பயணிகள் ரூ. 64.02 லட்சம் மதிப்புள்ள 898 கிராம் தங்கத்தை கம்பிகள் உள்ளிட்ட வடிவங்களில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அத்தங்கத்தை பறிமுதல் செய்து, 3 பேரிடமும் விசாரிக்கின்றனா்.

ரூ. 9.43 லட்சம் சிகரெட்டுகள்: இதேபோல சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மற்றும் மலேசியாவிலிருந்து ஏா் ஏசியா விமானத்தில் வந்த பயணிகள் இருவா் உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ. 9.43 லட்சம் மதிப்புள்ள 200 பாக்கெட் சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com